UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 09:29 PM
அ நிறம் | அளவு
மைசூரு:
அற்புதமான ஓவியங்களை பார்க்க விரும்பினால், மைசூரு தசரா ஓவிய கண்காட்சிக்கு வர வேண்டும்.தசரா திருவிழாவை ஒட்டி, ஓவியக்கலை மற்றும் கைவினை பொருட்கள் துணை கமிட்டி சார்பில், மைசூரின், கலா மந்திரில் ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலவிதமான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.மைசூரு அரண்மனை, அம்பாரி சுமந்த யானை, சாமுண்டீஸ்வரி, மஹிஷாசுரன், மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், புனித் உட்பட, பல்வேறு ஓவியங்கள் உள்ளன. கலைஞர்களின் கை வண்ணத்தில், ஒவ்வொரு ஓவியமும், அற்புதமாக உருவாகியுள்ளன.ஓவிய கண்காட்சி, வரும் 22ம் தேதி வரை நடக்கும். தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை இலவசமாக ஓவிய கண்காட்சியை காணலாம்.
