UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 04:46 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஒருமாத கால வீடியோ, போட்டோகிராபி, இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.பயிற்சி நவ.,20ல் துவங்குகிறது, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். வேலை இல்லாத 18 வயது நிரம்பிய கிராமப்புற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்கி வங்கி கடன் வசதி ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள கனராவங்கி பயிற்சி மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சிமைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
