UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 04:54 PM
கூடலுார்:
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் என் மண், என் தேசம், அமைப்பிற்காக மாணவிகள் மண் சேகரித்தனர். புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள 75 வது அமுதப் பெருவிழாவில் தியாகிகள், ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து மண் சேகரிக்கப்படுகிறது. இவை அக். 25ல் சென்னை கொண்டு சென்று அங்கிருந்து பிரதமரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக தேனி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மண் சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா, என்.எஸ்.எஸ். திட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மண்பானை மூலம் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து மண் சேகரித்துக் கொண்டுவந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன் செய்திருந்தார்.
