தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாட்கோ இலவச செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்கலாம்

தாட்கோ இலவச செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்கலாம்

தாட்கோ இலவச செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 20, 2023 12:00 AM

ADDED : அக் 20, 2023 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2023 12:00 AM ADDED : அக் 20, 2023 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
நர்சிங் துறையில் பொது மருத்துவம், மருத்துவச்சி, அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்து ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு டி.சி.எஸ்., அயன், அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து ப்பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி வழங்க உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 2021,22,23 ஆண்டுகளில் மேற்கூறிய படிப்புகளை முடித்த, இறுதியாண்டு படித்து வரும் 20 வயது முதல் 28 வயதுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்படும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் செவிலியர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி இருவாரங்கள் இணையத்திலும், 4 வாரங்கள் மருத்துவமனைகளில் நேரடி பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை, சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கிவிடும். பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார். பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04546 260995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us