தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருப்பூர் மருத்துவ கல்லுாரி ஆயுத பூஜையில் டீன் பரவசம்

திருப்பூர் மருத்துவ கல்லுாரி ஆயுத பூஜையில் டீன் பரவசம்

திருப்பூர் மருத்துவ கல்லுாரி ஆயுத பூஜையில் டீன் பரவசம்


UPDATED : அக் 21, 2023 12:00 AM

ADDED : அக் 21, 2023 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2023 12:00 AM ADDED : அக் 21, 2023 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன், கலெக்டர் அறிவுறுத்தலின் படி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆயுத பூஜை கொண்டாடலாம். சாமி படம், சிலை பயன்படுத்த கூடாது என, சுற்றறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததும், சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை என மறுத்தார். சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டீன் அலுவலகத்தில், சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் ஆகிய சாமி படங்களுக்கு செவ்வந்தி பூ மாலை போடப்பட்டது. பதிவேடுகளுக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டது.வாழை இலையில் பொரி, சுண்டல் படைக்கப்பட்டு, தேங்காய், பழம் வைக்கப்பட்டது. மாவிலை தோரணங்கள், தீர்த்தம், திருநீறு என, பக்தியுடன் டீன் அலுவலக வளாகம் மாறியது. டீன் முருகேசன், சாமி படம் முன் நின்று, மனமுருகி வணங்கினார். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில், சாமி படங்கள் வைத்து, பக்தி பரவசத்துடன், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கலெக்டர் உள்ளிட்டஅதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us