UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 06:06 PM
கோவை:
அறிவியல் மீதான புரிதல் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ரேடியோ செய்யலாம் வாங்க என்ற தலைப்பில் பல்வேறு பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு, இலவச பயிற்சி வகுப்புகள் வரும், நவ., 8ம் தேதி சி.ஐ.டி., கல்லுாரியில் நடைபெறவுள்ளது.கோவை சி.ஐ .டி கல்லுாரியில் அமைந்துள்ள இந்திய பொறியியல் சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் கணிதவாணி கணித அறிவியல் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் பல்வேறு அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக செயலர் பிரபாகரன் கூறுகையில், இப்பயிற்சி வகுப்பில், வயது தடையில்லை என்பதால் ஆர்வமுள்ள எவர் வேண்டுமானலும் பங்கேற்கலாம். இதில், , பவர் பாங்க் , அலங்கார விளக்குகள் தயாரித்தல், இறக்கையில்லாத மின்விசிறி போன்றவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.தாம் தயாரிக்கும் பொருட்களை பயிற்சிக்கு பின் வீடுகளுக்கு எடுத்து செல்லலாம். பயிற்சி இலவசமாக வழங்கப்படும்; பயிற்சிக்கான பொருட்கள் என்னென்ன வாங்கிவரவேண்டும் என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.கட்டணம் கிடையாது என்றாலும், முன்பதிவு செய்யவேண்டியது கட்டாயம். ஆர்வமுள்ளவர்கள், நவ., 5ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இதுபோன்ற தயாரிப்புகளை கற்றுக்கொள்வது பெரிய தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தி தர வாய்ப்புக்கள் உண்டு, என்றார்.மேலும், விபரங்களுக்கு, கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களை 9894263165, 8903360125, 9443316984 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
