துவக்க பள்ளி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
துவக்க பள்ளி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 09:53 AM
புதுச்சேரி:
காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள 145 துவக்க பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள துவக்க பள்ளி அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நேற்று முன்தினம் கவர்னர் அனுமதி அளித்தார். இதனையடுத்து இவ்விரு பிராந்தியங்களில் உள்ள துவக்க பள்ளி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நிர்வாக சீர்திருத்த துறை விண்ணப்பம் வரவேற்றுள்ளது. இன்று 21ம் தேதி காலை 10 மணி முதல் நவம்பர் 20ம் தேதி மாலை 5.45 வரை http://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பம் சமர்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தகுந்த சான்றிதழ்கள் நகல்களுடன், இயக்குநர், பள்ளி கல்வித் துறை, பெருந் தலைவர் காமராஜர் கல்விவளாகம், 100 அடி ரோடு, அண்ணாநகர், புதுச்சேரி -605005 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் சுய கையொப்பமிட்டு, அடுத்த மாதம் 27ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைனில் சமர்பிக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
