வேளாண் கல்லூரியில் மூலிகை தோட்டம்: செல்வகணபதி எம்.பி., திறப்பு
வேளாண் கல்லூரியில் மூலிகை தோட்டம்: செல்வகணபதி எம்.பி., திறப்பு
UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 10:01 AM
புதுச்சேரி:
தவளக்குப்பத்தில் உள்ள, புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூலிகை தோட்டத்தை செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.தவளக்குப்பத்தில் உள்ள புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி பண்ணையில், மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் அடங்கிய மூலிகை தோட்டம் அமைத்துள்ளனர்.அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் அக்ரி கணேஷ் வரவேற்றார். செல்வகணபதி எம்.பி., மாணவர்கள் ஏற்படுத்திய 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையம், மூலிகை தோட்டம், காளான் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் கூடங்களை திறந்து வைத்து, பார்வையிட்டு பாராட்டினார். மேலும், தாவரங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் ரமேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள், சுப மணிகண்டன், கார்ல் மார்க்ஸ், ஜெயசவிதா, வினிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
