புதுமை தொழில்களில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் போட்டி
புதுமை தொழில்களில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் போட்டி
UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 11:24 AM
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை, உலக வங்கி உதவியுடன், வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், கிராமப்புற பெண்கள், சுய உதவி குழுக்களின் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களை வைத்து, 6,000 நிறுவன குழுக்கள், 6,620 தனி நபர் நிறுவனங்களை உருவாக்கி, அவர்களின் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.இக்குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழியே, 10 புதுமையான தொழில்களை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்துகிறது.*செங்கல்பட்டு மாவட்டத்தில், இருளர் பழங்குடியினர் மகளிர் நல சங்கம் சார்பில், இயற்கை உர விதை பந்து*திருச்சி ஸ்ரீரங்கம் வாழை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், வாழை சக்தி என்ற உரம்*துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த தொழில் குழுக்கள், ஆகாய தாமரை தண்டுகளில் இருந்து, கைவினை பொருட்கள்*தொழிலக கொதிகலன்களுக்கு தேவையான எரிபொருள் தயாரிக்கும் ஈரோடு மாவட்டம், தாளவாடி கிராம பழங்குடியினர் நிறுவன குழுமம்*எலக்ட்ரிக் வாகனத்தில், உணவுப் பொருள் மற்றும் மசாலா பொருட்களை விற்கும் செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கிராம மகளிர் குழு*நாகப்பட்டினம் மாவட்டம், சங்கமங்கலம் கிராம மகளிர் குழுவினரின் காளான் வளர்ப்பில் இணையதள தொழில்நுட்பம்*நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றிய மகளிர் குழு, நெல் தவிடு, தென்னை நார் கழிவிலிருந்து, தயாரிக்கும் தேநீர் கோப்பை*விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொழில் குழு நிலக்கடலை தோலில் இருந்து தயாரிக்கும் மட்கும் தன்மையுள்ள தேநீர் கோப்பைகள்*சேலம், திருவண்ணாமலை மாவட்ட தொழில் குழுக்கள், சோள மாவு தாள்களை பயன்படுத்தி தயாரிக்கும் மட்கும் தன்மை கொண்ட சானிடரி நாப்கின்*சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட நிறுவன தொழில் குழு உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட சூளை இந்த தொழில்களில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணவும், தொழில்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, ஐடியா பார் சேஞ்ச் என்ற போட்டியை, வாழ்ந்து காட்டுவோம் இயக்கம் அறிவித்து உள்ளது.மேலும் விபரங்களுக்கு, vkp-tnrtp.org இணையதளத்தில் உள் நுழையவும். ஏதேனும் கேள்விகள் இருந்தால், ideaforchange.tnrtp@gmail.com இ-மெயில் முகவரி அல்லது 022 - 61952700 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
