போலி சாரண - சாரணியர் இயக்கம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
போலி சாரண - சாரணியர் இயக்கம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 08:07 AM
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தேசிய மாணவர் படை என்ற என்.சி.சி., - நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ்., - பாரத சாரண - சாரணியர் இயக்கம் என்ற, பாரத் ஸ்கவுட்ஸ் அண்டு கெய்ட்ஸ் ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன.இவற்றில், பள்ளி மாணவர்கள் சேர்க்கப்பட்டு பல்வேறு பயிற்சி கள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் தரும் சான்றிதழ்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பயன்படும் என்பதால், இவற்றில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மாணவர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, சிலர் தனியாக சாரண - சாரணியர் இயக்கம் துவங்கி, மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.சமீபகாலமாக, ஹிந்துஸ்தான் என்ற பெயரில் சாரண - சாரணியர் இயக்கம் நடத்தி, மாணவர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
பாரத சாரண - சாரணியர் இயக்கம் தவிர, அதிகாரப்பூர்வமாக வேறு சாரணர் இயக்கங்கள், அரசின் சார்பில் செயல்படுவது இல்லை.எனவே, வேறு பெயர்களில் போலி சாரணர் இயக்கங்கள், பள்ளிகளை தொடர்பு கொண்டால் புகார் அளிக்கலாம். அந்த இயக்கங்களில் மாணவர்கள் சேர்ந்து, பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
