ஆதித்யா வெற்றி ஜனவரியில் தெரியும்: திட்ட இயக்குனர்
ஆதித்யா வெற்றி ஜனவரியில் தெரியும்: திட்ட இயக்குனர்
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 09:01 AM
திருச்சி:
திருச்சியில், பசுமை மற்றும் பருவநிலை மாற்றம் சார்ந்த சிறு குறு தொழில்கள் மேற்கொள்ளும் பெண்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்ற ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குனர் நிஹார் ஷாஜி கூறியதாவது:
சந்திரனில் உள்ள மாதிரிகளை எடுத்து வந்து, ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வதற்கான பணி நடைபெறுகிறது. ஆதித்யா எல் - 1 செயற்கைக் கோள், சூரியனின் இயக்கத்தை ஆய்வு செய்யும்.சூரியன், 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆக்ரோஷம் அடையும் போது, விண்வெளியில் ஏவப்பட்டு உள்ள செயற்கைக் கோள்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்து, அவை தற்காத்து கொள்வதற்கான ஆய்வுகளை ஆதித்யா எல் - 1 மேற்கொள்ளும். ஜனவரி முதல் வாரத்தில், ஆதித்யாவின் வெற்றி குறித்து தெரியும். சூரியன், செவ்வாய் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்தெரிவித்தார்.
