தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழலைகளின் கல்விக்கு அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

மழலைகளின் கல்விக்கு அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

மழலைகளின் கல்விக்கு அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி


UPDATED : அக் 23, 2023 12:00 AM

ADDED : அக் 23, 2023 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2023 12:00 AM ADDED : அக் 23, 2023 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தினமலர் - பட்டம் இதழ் மற்றும் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், வரும் 24ம் தேதி அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் புதுச்சேரி விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சரஸ்வதி ஹாலில் வரும் 24ம் தேதி விஜயதசமி அன்று காலை 7.00 முதல் காலை 10:00 மணி வரை நடக்கிறது.முழுக்க முழுக்க கல்வி சேவைக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, எந்த பள்ளிக்கும் அட்மிஷனுக்காக நடத்தப்படவில்லை. நிகழ்ச்சியில் 2.5 மற்றும் 3.5 வயது மழலைகள் விரல் பிடித்து பிரபல கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் அ -ஆ எழுதி பழக்க உள்ளனர்.விவேகானந்தா கல்வி குழும தலைவர் செல்வகணபதி எம்.பி., கலெக்டர் வல்லவன், சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன், ஆடிட்டர் செல்வராஜ், புதுச்சேரி சுகாதார துறை முன்னாள் இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளை வாழ்த்தி அகரம் கற்பிக்க உள்ளனர்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முதல் நாள் அவர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான நாள். குழந்தைகளின் ஆரம்ப நிலை கல்வி தான், அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் வாழ்நாள் முழுதும் துணை நிற்கும்.விஜயதசமி திருநாள், கல்வி கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடி ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள் காத்திருக்கின்றனர். நிகழ்ச்சியில், முன்பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஸ்கூல் கிட் பரிசாக வழங்கப்படும்.அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு இன்று 22ம் தேதி மட்டும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை 9597326264, 7871479674 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்கவுள்ள உங்க செல்ல குழந்தைகளை 24ம் தேதி காலை 7:00 மணிக்குள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வாருங்கள். என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தரப்பில் இருந்து முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக, தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us