எங்கள் பள்ளி மிளிரும் திட்டம் பள்ளிகளில் துவங்க அறிவுரை
எங்கள் பள்ளி மிளிரும் திட்டம் பள்ளிகளில் துவங்க அறிவுரை
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 03:36 PM
திருப்பூர்:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த, &'எங்கள் பள்ளி மிளிரும் திட்டத்தை&' செயல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மேஜை, நாற்காலிகள், அலமாரிகள் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.தன் சுத்தம், சுகாதாரம் சார்ந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினசரி காலை வழிபாட்டுக் கூட்டத்தில், துாய்மை எனும் தலைப்பில் பழமொழி, குறுஞ்செய்தி, அறிவியல் பூர்வமான தகவல்களை பகிர ஆர்வமூட்ட வேண்டும். சுத்தம், சுகாதாரம் சார்ந்த பேச்சு, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு உள்ளிட்ட போட்டிகளை நடத்தி, துாய்மையான பள்ளி குறித்து அறியச் செய்தல் வேண்டும்.புகையிலை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தரப்பில் இருந்து முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக, தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
