UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 11:20 AM
நங்கநல்லுார்:
மாணவர்கள், இளம் தலைமுறையினர்களிடம் நாணயங்கள் சேரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை நாணயவியல் அமைப்பு, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.அதன் சார்பில், நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்களின் கண்காட்சி, மூன்று நங்கநல்லுாரில் மூன்று நாட்கள் நடந்தது. நாணயவியல் அமைப்பின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:
மறைந்த தினமலர் ஆசிரியரும், தென்னிந்திய நாணயவியல் சங்க தலைவராகவும் இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்டது தான், சென்னை நாணயவியல் அமைப்பு.இதன் சார்பில், ஆறு ஆண்டுகளாக கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியில், இந்தியா முழுதும் இருந்து, 60க்கும் மேற்பட்ட நாணய சேகரிப்பாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று, அரங்கு அமைத்திருந்தனர்.கடந்த 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள் முதல் அனைத்து அரிய வகை நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள் பலரும் வந்து, பழங்கால நாணயங்கள் குறித்து அறிந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
