சர்வதேச விண்வெளி மையத்தில் போட்டி கூடாது: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
சர்வதேச விண்வெளி மையத்தில் போட்டி கூடாது: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 11:22 AM
கோவை:
சர்வதேச விண்வெளி மையத்தில், போட்டி கூடாது. அனைத்து நாடுகளும் ஒன்றாக இயங்க வேண்டும். இந்தியா வழி நடத்த வேண்டும், என கோவையில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். அவர் கூறியதாவது:
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம், 14 நாட்கள் மட்டுமே. பிரக்ஞான் அலைவரிசை, விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால்தான் தகவல் கிடைக்கும். இப்போது பிரக்ஞான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது. ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது. குலசேகரபட்டினம் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும், ஏவுதளம் அமைப்பதை தாண்டி, எரிபொருள் தயாரிப்பது உட்பட திட்டங்ளை கொண்டு செயல்பட, அது சிக்கனமான ஏவுதளமாக அமையும். சிறிய ரக செயற்கை கோள்கள்தான் இப்போது அனுப்பப்படுகின்றன. தினமும் ஒன்று, இரண்டு அனுப்பும் நிலை வரலாம். அப்போது சிறப்பான இடமாக குலசேகரபட்டினம் ஏவுதளம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
