பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 11:32 AM
தர்மபுரி:
பள்ளிக் கல்வித்துறை சார்பாக வரும், 26 முதல், 28 வரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடக்கிறது என, தர்மபுரி சி.இ.ஓ., குணேசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கலைத்திறனை வெளிகொண்டும் வரும் வகையில், பள்ளி, யூனியன், மாவட்ட மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில், பள்ளி அளவில் கடந்த, 10 முதல், 14 வரை கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களை கொண்டு கடந்த, 18 முதல், 21 வரை யூனியன் அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும், 26 முதல், 28 வரை மாவட்ட அளவிலானபோட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, நவ., 21 முதல், 24 வரை மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. எனவே, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தி அதிகளவில், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
