தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்வழி இட ஒதுக்கீடு சட்டம் மாற்றம் செய்ய வலியுறுத்தல்

தமிழ்வழி இட ஒதுக்கீடு சட்டம் மாற்றம் செய்ய வலியுறுத்தல்

தமிழ்வழி இட ஒதுக்கீடு சட்டம் மாற்றம் செய்ய வலியுறுத்தல்


UPDATED : அக் 24, 2023 12:00 AM

ADDED : அக் 24, 2023 08:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2023 12:00 AM ADDED : அக் 24, 2023 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழ் வழியில் அதிக மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்கவும், அரசு பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதி 2010ல் அமல்படுத்தினார். அதன்படி 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி தமிழில் படித்திருந்தால் போதும் என்ற அடிப்படையில் அரசு பணிக்கான இட ஒதுக்கீட்டு சலுகையை பெற்றனர்.ஆனால் 2019ல் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழில் படித்தவர் மட்டுமே, இந்த இடஒதுக்கீட்டை பெற முடியும் என்ற வகையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை நீதிமன்றம் உருவாக்கி உத்தரவிட்டது. இதனால் தமிழ் வழி படித்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.சமூக நீதி கிடைக்க வேண்டும் என, கருணாநிதி அறிமுகம் செய்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக இருந்தும் இது தொடர்பாக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எவ்வித மேல்முறையீடு செய்யாமல், நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுகிறது. இதனால் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சர்ச்சை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us