UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:23 AM
அ நிறம் | அளவு
கோட்டூர்புரம்:
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், அழகப்பா டெக்னாலஜி கல்லுாரி இயங்கி வருகிறது.இக்கல்லுாரியில் பணியாற்றும் டீன் ஜெயபால், நேற்று முன்தினம், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கல்லுாரிக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த, 2.50 லட்சம் மதிப்பிலான ஐந்து புரஜெக்டர்கள், 15 கணிணி உதிரிபாகங்களை, கடந்த 18ம் தேதி, இரு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவற்றை மீட்டு, மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
