குன்றத்துார் அறிவுசார் மையம் திறக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
குன்றத்துார் அறிவுசார் மையம் திறக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:24 AM
குன்றத்துார்:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் நகராட்சியில், 1.95 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு தளத்தில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காக அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் கட்டப்பட்டு வருகிறது.கணினி வசதிகளுடன் பயிற்சி மையம், போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஆக., மாதம் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.மாணவர்கள் கூறியதாவது:
அரசு தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்றால், சென்னைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. ஏழை, எளிய மற்றும்நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், செலவு செய்து, சென்னை போன்ற நகரங்களுக்கு தினம் சென்று வர முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட குன்றத்துார் அறிவுசார் மையத்தை திறந்தால், இங்கேயே போட்டி தேர்வுகளுக்கு படிப்போம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
