தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அருப்புக்கோட்டை ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

அருப்புக்கோட்டை ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு

அருப்புக்கோட்டை ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு


UPDATED : அக் 26, 2023 12:00 AM

ADDED : அக் 26, 2023 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2023 12:00 AM ADDED : அக் 26, 2023 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஹிந்தி ஆசிரியை ஜெயலட்சுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.அருப்புக்கோட்டை சிவானந்தா மெட்ரிக் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக உள்ளவர் ஜெயலட்சுமி. இவர் மாணவர்களின் வளர்ச்சி பற்றிய கருத்துக்களை வெப்சைட் வாயிலாக தெரிவித்து இருந்தார்.இதில் மாணவர்களின் நலனுக்காக அனுப்பிய கருத்துக்களை பிரதமர் மோடி பாராட்டி கையெழுத்து இட்ட கடிதத்தை ஆசிரியருக்கு அனுப்பி வைத்து நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து ஆசிரியை ஜெயலட்சுமி கூறுகையில், பள்ளி மாணவர்கள் மாறிவரும் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கல்வி கற்கும் திறனை மாற்றிக்கொள்ள வேண்டும்.தொழில் நுட்பங்களை கல்வி கற்பதற்கு கூறிய சரியான அளவுகோலாக மாற்ற வேண்டும். போட்டி நிறைந்த உலகில் தாய்மொழி தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கி தரும்.விளையாட்டு மற்றும் கல்வி துறைகளில் அதிக வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மாணவர்கள் படிப்பு தவிர அந்த வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் உட்பட பல கருத்துக்களை தெரிவித்திருந்தேன். இதை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் அனுப்பியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us