ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து விசாரிப்பு
ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து விசாரிப்பு
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:45 AM
அ நிறம் | அளவு
ஈஞ்சம்பாக்கம்:
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், 1.62 கோடி ரூபாய் செலவில், அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, 1.40 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் நுாலக கட்டடத்தை கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.மேலும், 1.10 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் ஊராட்சி கட்டடம், ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி மாணவ - மாணவியரிடம் கற்றல் திறன் மேம்பாடு குறித்து கேட்டறிந்தார். இதுதவிர, மதிய உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பு அலுவலர் பாபு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
