அகில இந்திய யோகாசன போட்டி: தமிழக மாணவர்களுக்கு பரிசு
அகில இந்திய யோகாசன போட்டி: தமிழக மாணவர்களுக்கு பரிசு
UPDATED : ஜன 25, 2010 12:00 AM
ADDED : ஜன 25, 2010 05:55 PM
காஞ்சிபுரம்: அகில இந்திய யோகாசனப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவ, மாணவியர் பரிசு பெற்றனர்.
தமிழ்நாடு யோகா கல்சுரல் சொசைட்டி, மேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய யோகா கல்சுரல் பெடரேஷன் உடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அகில இந்திய யோகா பெடரேஷன், இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. யோகாசனப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க இட ஒதுக்கீடு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற உள்ளது.
சமீபத்தில் அரியானாவில் அகில இந்திய யோகாசனப் போட்டி நடந்தது. தமிழகத்திலிருந்து 28 பேர் கலந்து கொண்டனர். வெவ்வேறு வயதுப் பிரிவில், சூரப்பேட் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் நிர்மல்குமார், நிர்மல்பாபு, வெங்கடேசன் ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். தனுஷ்குமார் மூன்றாவது பரிசு பெற்றார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபிராமி முதல் பரிசு, காயத்ரி இரண்டாவது பரிசு பெற்றனர் என, தமிழ்நாடு யோகாசன கல்சுரல் சொசைட்டி நிறுவனர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
