தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாட புத்தகங்களில் இந்தியா பெயர் மாற்ற பரிந்துரை

பாட புத்தகங்களில் இந்தியா பெயர் மாற்ற பரிந்துரை

பாட புத்தகங்களில் இந்தியா பெயர் மாற்ற பரிந்துரை


UPDATED : அக் 26, 2023 12:00 AM

ADDED : அக் 26, 2023 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2023 12:00 AM ADDED : அக் 26, 2023 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான பாட புத்தகங்களை வடிவமைப்பது, திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை சீர்திருத்தம் செய்யும் வகையில், அவ்வப்போது பரிந்துரைகளை வழங்குவது வழக்கம். கடந்த 2020ல், தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.திருத்தம்
இதை தொடர்ந்து, அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வதற்காக, 19 உறுப்பினர்கள் அடங்கிய என்.எஸ்.டி.சி., எனப்படும், தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் பொருள் குழு என்ற கமிட்டியை என்.சி.இ.ஆர்.டி., அமைத்தது.இந்த குழுவின் தலைவராக சி.ஐ.ஐசக் உள்ளார். மேலும், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ரகுவேந்திர தன்வார், ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் வந்தனா மிஸ்ரா, டெக்கான் கல்லுாரி நிகர்நிலை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் வசந்த் ஷிண்டே, ஹரியானா அரசு பள்ளியின் சமூகவியல் ஆசிரியர் மம்தா யாதவ் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்குமான பாட புத்தகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து, இந்த குழு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதன் விபரம்:
அனைத்து வகுப்புகளுக்குமான பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ள, இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக, பாரத் என்ற வார்த்தை மாற்றப்பட வேண்டும். அதேபோல, பண்டைய வரலாறுக்கு பதில், நம் நாட்டின் பாரம்பரிய வரலாற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.பாரத் என்பது பழமையான பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நுால்களில் பாரதம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜி - 20 மாநாட்டுக்கான அழைப்பிதழ்களில், இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக, பாரத ஜனாதிபதி என முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டது.பரபரப்பு
மாநாட்டின் போது, பிரதமரின் பெயர் பலகையிலும் பாரத் என்ற வார்த்தையே இடம் பெற்றது. இந்த அடிப்படையில் தான், இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளோம். வரலாற்று பாட புத்தகங்களில், ஹிந்து மன்னர்கள் போர்களில் தோல்வி அடைந்தது குறித்து தான் அதிகம் கூறப்பட்டுள்ளது.முகலாய மன்னர்கள், சுல்தான்களை அவர்கள் போரில் வெற்றி கண்டது குறித்த உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, நம் ஹிந்து மன்னர்கள் போர்களில் பெற்ற வெற்றிகளை பாட புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும்.ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை பண்டைய, இடைக்கால மற்றும் நவீன-வரலாறு என, மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளனர். நம் நாட்டை இருண்ட தேசமாகவும், அறிவியல் அறிவு மற்றும் முன்னேற்றம் பற்றி அறியாத நாடாகவும் சித்தரித்துள்ளனர். மேலும், அனைத்து பாடங்களுக்கான பாட திட்டங்களிலும், இந்திய அறிவு முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தகவல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழுவின் பரிந்துரை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை; பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என, என்.சி.இ.ஆர்.டி., தலைவர் தினேஷ் சக்லானி நேற்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us