தேவதானபட்டி பள்ளி மாணவரின் கட்டுரைக்கு பிரதமர் மோடி பாராட்டு
தேவதானபட்டி பள்ளி மாணவரின் கட்டுரைக்கு பிரதமர் மோடி பாராட்டு
UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 27, 2023 10:32 AM
தேனி:
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பள்ளி 10 ம் வகுப்பு மாணவர் அபினவ்யஸ்வந்த் 15, எழுதிய கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற மூன்று பக்க கட்டுரையை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் அனுப்பி உள்ளார்.தேவதானப்பட்டியில் கல்வி சர்வதேச பப்ளிக் பள்ளி உள்ளது. இங்கு பெரியகுளத்தை சேர்ந்த பொன்னம்பலம், வனிதா தம்பதியின் மகன் அபினவ்யஸ்வந்த், பத்தாம் வகுப்பு படிக்கிறார். இவர், பிரதமரால் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பரிக்சா பே சர்ச்சா - 2023 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் கட்டுரை போட்டியில் கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற கட்டுரை எழுதி சமர்ப்பித்திருந்தார். அதனை பாராட்டி, பிரதமர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் தெரிவித்துள்ளதாவது:
உங்களை போன்ற, இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறன்களைப் பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறேன், என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
