தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிய உணவு வர தாமதம்: பயிற்சியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்

மதிய உணவு வர தாமதம்: பயிற்சியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்

மதிய உணவு வர தாமதம்: பயிற்சியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்:
சாத்துார் மேட்ட மலையில் உள்ள தனியார் கல்லுாரியில் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால் பலர் தங்கள் பள்ளிக்கு திரும்பிச் சென்றனர்.விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் கல்வி துறையும் இணைந்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே இயற்கை வளத்தை பாதுகாக்கும் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் இளம் பசுமை ஆர்வலர்கள் 2023 திட்டம் மூலம் மாணவர்களுக்கு பசுமை வளம் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேட்ட மலையில் உள்ள கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரியில் சிவகாசி சுற்று கிராமங்களை சேர்ந்த 83 பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமிற்கு 250 மாணவர்களை வருவார்கள் என திட்டமிட்டு இருந்த நிலையில் ஆயிரம் மாணவர்கள் மேல் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் மதிய உணவு விருதுநகரில் உள்ள ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.நேற்று மதியம் 2:30 மணி வரை அனைவருக்கும் உணவு வழங்கப்படவில்லை 250 மாணவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டதால் மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.பசியால் கிறங்கிய மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் வந்த பஸ்களில் ஏற்றி தங்கள் பள்ளிகளுக்கு திரும்பிச் செல்ல முயன்றனர். கேட் திறக்கப்படாததால் ஆசிரியர்கள் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கல்லுாரி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததை அடுத்து கேட் திறக்கப்பட்டது. பயிற்சி முகாமிற்கு வந்த மாணவர்கள் பலர் முகாமில் கடைசி வரை கலந்து கொள்ளாமல் பாதியிலேயே திரும்பிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us