தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பண்ணைக்காடு பள்ளியில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்

பண்ணைக்காடு பள்ளியில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்

பண்ணைக்காடு பள்ளியில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 05:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ணைக்காடு:
திண்டுக்கல் மாவட்டம் பண்ணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கத்தியுடன் உலாவிய மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பண்ணைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் மது போதையில் வாள், கத்தியுடன் பள்ளிக்குள் உலா வந்தனர். ஆசிரியர் ஒருவரை ஒருமையில் திட்டி மிரட்டினர்.பாதிக்கப்பட்ட ஆசிரியர் 5 மாணவர்கள் மீது தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தார். பெற்றோர் சமரசத்தையடுத்து மாணவர்களின் எதிர்கால நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. தலைமையாசிரியர் விஜயவேலிடம் கேட்டபோது, விடுப்பில் உள்ளேன். இது குறித்து விசாரித்து கூறுகிறேன், என்றார்.முதன்மை கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us