தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/68 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது

68 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது

68 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 06:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
இம்முறை 68 சாதனையாளர்களுக்கும், கன்னட வளர்ச்சிக்கு உதவிய 10 அமைப்புகளுக்கும் கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் வழங்குவதற்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த உயர்மட்ட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்த நவம்பர் 1ம் தேதியை, கர்நாடகாவில் கன்னட ராஜ்யோத்சவா விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், கன்னட மொழி வளர்ச்சிக்கும், கர்நாடகா வளர்ச்சிக்கும் பெருமை சேர்த்த வெவ்வேறு துறையை சார்ந்தவர்களுக்கு கன்னட ராஜ்யோத்சவா விருது வழங்கப்படும்.அந்த வகையில், இந்தாண்டு விருதுக்கு, 6,000த்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. விருது தேர்வு குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், 68ம் ஆண்டு கன்னட ராஜ்யோத்சவா என்பதால், 68 பேருக்கு விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 50 ஆண்டுகள் ஆனதால், கன்னட மொழி வளர்ச்சிக்காக செயல்பட்ட 10 அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.ராஜ்யோத்சவா விருதுக்கான தேர்வின் போது, தகுதியானவர்களுக்கு விருது வழங்க வேண்டும். பிராந்திய நீதியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து ஜாதி, மதம், பாலின பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்' என்று முதல்வர் சித்தராமையா, தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்தார்.துணை முதல்வர் சிவகுமார், கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி உட்பட விருது தேர்வு குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஓரிரு நாளில் ராஜ்யோத்சவா விருது பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us