தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைப்பது ஏன்?: அண்ணாமலை

மாணவர்கள் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைப்பது ஏன்?: அண்ணாமலை

மாணவர்கள் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைப்பது ஏன்?: அண்ணாமலை


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 06:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக தி.மு.க., எம்.எல்.ஏ கையெழுத்து வாங்கிய சம்பவத்திற்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மாணவர்கள் மனதில் தி.மு.க., தற்கொலை எண்ணத்தை விதைப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அரசு பள்ளியில் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா வலியுறுத்தும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை பகிர்ந்து, அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக தி.மு.க., எம்.எல்.ஏ கையெழுத்து வாங்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியிருப்பதாவது: 
நீட் எதிர்ப்பு பிரசாரத்தை தி.மு.க., தற்போது அரசு பள்ளிகள் வரை கொண்டு சேர்த்துள்ளது. பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மகனின் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது.அரசுப் பள்ளிக்கு சென்ற தி.மு.க., எம்எல்ஏ பிரபாகர் ராஜா, நாளைய டாக்டர்களாக வேண்டிய மாணவர்களிடம் நீட் தேர்வு எதிராக தற்கொலை எண்ணத்தை தூண்டும் விஷமப் பிரச்சாரம் செய்துள்ளார். இளம் மாணவர்களின் மனதில் திமுக ஏன் தற்கொலை என்ற எண்ணத்தை விதைக்கிறது?.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளுக்கு பணம் பெறுவதை நீட் தேர்வு தடுப்பதால், அதனை திமுகவினர் தடுக்கின்றனர். அண்மையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் திமுக எம்பியின் மருத்துவக் கல்லூரியில் போலி ரசீது மூலம் 400 கோடி ரொக்கப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தி.மு.க., இந்த கேவலமான அரசியலை நிறுத்திவிட்டு, நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us