தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை தர வேண்டும்: அண்ணாமலை

டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை தர வேண்டும்: அண்ணாமலை

டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை தர வேண்டும்: அண்ணாமலை


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 06:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
தமிழகத்தில் போற்றப்பட வேண்டிய ஆசிரியர்கள் செவிலியர்கள் தங்கள் வாழ்க்கைக்காக அரசிடம் கையேந்தி போராடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அதில் 24,000 பேர் ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர்.மீதமுள்ளவர்களை 10 ஆண்டுகளுக்கு பின் புதியவர்களுடன் மீண்டும் போட்டி தேர்வு எழுதச் சொல்வது நியாயமற்றது. பின் எந்த நியாயத்தில் தி.மு.க. வினர் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக டெட் தேர்வு நடத்தப்பட்டு 2012 வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் 2013ல் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை. புதிய அரசாணையை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிப்பது நியாயமற்றது.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்படும்&' என்ற வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். பல்வேறு போராட்டங்கள் நடத்த பின்பும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டு ஆவண செய்ய மனமில்லாத தி.மு.க. அரசு பிரச்னையின் முக்கியத்துவத்தை உணராமல் பாராமுகமாக இருப்பது துரதிஷ்டவசமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us