பள்ளியில் மின்விசிறி விழுந்து பிளஸ் 1 மாணவர் படுகாயம்
பள்ளியில் மின்விசிறி விழுந்து பிளஸ் 1 மாணவர் படுகாயம்
UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 07:00 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்:
புதுச்சேரி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பிளஸ் 1 வகுப்பறையில் அக்., 26ம் தேதி காலை வணிகவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. 10.45 மணிக்கு வகுப்பு அறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி கழன்று மாணவர் தனதர்ஷன், 16, என்பவர் தலையில் விழுந்தது; அவர் படுகாயமடைந்தார். சக மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி முதல்வர், பிற ஆசிரியர்கள் விரைந்து சென்று மாணவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் மாலை மாணவர், அவரது தந்தை டேவிட்டுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
