தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகத்தை பற்றி குறை கூறாதீர்கள்: ஐ.ஐ.எம்., விழாவில் ஜனாதிபதி பேச்சு

உலகத்தை பற்றி குறை கூறாதீர்கள்: ஐ.ஐ.எம்., விழாவில் ஜனாதிபதி பேச்சு

உலகத்தை பற்றி குறை கூறாதீர்கள்: ஐ.ஐ.எம்., விழாவில் ஜனாதிபதி பேச்சு


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 07:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
உலகத்தை பற்றி குறை கூறாதீர்கள். ஆனால், எதிர்கால சந்ததியினர் குறைகூற எதுவும் இல்லாத, அவர்கள் நல்லிணக்கம், நம்பிக்கை, செழிப்பு மற்றும் சமத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு உலகத்தை விட்டு செல்லுங்கள் என ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.பெங்களூரில், 1973ல் ஐ.ஐ.எம்., எனும் இந்திய அறிவியல் கழகம் துவங்கப்பட்டது. இதன், பொன்விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானம் மூலம் எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்கினார். கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, தலைமை செயலர் வந்திதா ஷர்மா, போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.பின், ஐ.ஐ.எம்., பொன் விழாவில் ஜனாதிபதி பங்கேற்று, பேசியதாவது:பெங்களூரு ஐ.ஐ.எம்., நிர்வாக திறமை மற்றும் வளங்களை வளர்த்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில், மேலாளர்களை மட்டுமின்றி, தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் மாற்றங்களை உருவாக்குபவர்களையும் உருவாக்கியுள்ளது.மனித வரலாற்றில், மிக மோசமான மற்றும் முன்னோடியில்லாத துயரங்களில் ஒன்றின் கீழ் உலகம் தத்தளித்துக் கொண்டிருந்த தொற்று நோய்களின் போது, என்.எஸ்.ராகவன் தொழில் முனைவோர் கற்றல் மையம், தேசிய மகளிர் ஆணையத்தின் ஆதரவுடன், ஆன்லைன் மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தை நடத்தினர்.இதில் 3,000 பெண் தொழில் முனைவோர் பங்கேற்று பயனடைந்தனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புகழ் பெற்ற நிறுவனத்தில் உங்கள் திறமையை நிரூபித்திருப்பது, உங்கள் தகுதிக்கான அங்கீகாரமாகும்.நமது கூட்டு முயற்சியால் தான் இன்று ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறோம். நாம் ஒரு செழிப்பான, நன்கு செயல்படும் ஜனநாயக நாடாக திகழ்கிறோம். நாம் சந்திரனை அளந்து விட்டோம்; இப்போது நம் கண்கள் சூரியனை பார்க்கின்றன. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், மெத்தனமாக இருக்கக்கூடாது. இன்று உலகம் ஆழமான சவால்களை எதிர்கொள்கிறது. அது காலநிலை மாற்றத்தின் சவலாக இருந்தாலும், சீரழிந்து வரும் தார்மீக சவாலாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும்.உலகத்தை பற்றி குறை கூறாதீர்கள். ஆனால், எதிர்கால சந்ததியினர் குறைகூற எதுவும் இல்லாத, அவர்கள் நல்லிணக்கம், நம்பிக்கை, செழிப்பு மற்றும் சமத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு உலகத்தை விட்டு செல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஐ.ஐ.எம்., தலைவர் தேவி பிரசாத் ஷெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us