தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்டேட் பகுதியில் நூலகம்: அரசுக்கு கோரிக்கை

எஸ்டேட் பகுதியில் நூலகம்: அரசுக்கு கோரிக்கை

எஸ்டேட் பகுதியில் நூலகம்: அரசுக்கு கோரிக்கை


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறை, எஸ்டேட் பகுதியில் நடமாடும் நுாலகம் கொண்டு வர வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில், நகரின் மத்தியில் முழுநேர நுாலகமும், சோலையாறு நகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில், பகுதி நேர நுாலகமும் செயல்படுகிறது. பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லை. ஆரம்ப காலக்தில் எஸ்டேட் பகுதியில் இயங்கி வந்த மனமகிழ் மன்றமும் தற்போது இல்லை. இதனால், எஸ்டேட் பகுதியில் படித்த இளைஞர்கள் அன்றாட நாளிதழ்களை வாசிக்க முடியாமலும், நுால்களை படிக்க வழியின்றி சிரமப்படுகின்றனர்.இது குறித்து, எஸ்டேட் பகுதி வாசகர்கள் கூறுகையில், எஸ்டேட்களில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பல ஆண்டு களாக இயங்கி வந்த மனமகிழ் மன்றங்கள் தற்போது மூடப்பட்டதால், வாசகர்கள் சிரமத்துக்கு உள்ளாகிறோம்.எனவே, தமிழக நுாலக துறை சார்பில், கருமலை, ரொட்டிக்கடை, முடீஸ், சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில், பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும். பிற எஸ்டேட் பகுதிகளில் வாசகர்களின் நலன் கருதி நடமாடும் நுாலகம் கொண்டுவர வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us