தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவு திட்டத்தில் கடலை மிட்டாய் இடம்பெற வாய்ப்பு

காலை உணவு திட்டத்தில் கடலை மிட்டாய் இடம்பெற வாய்ப்பு

காலை உணவு திட்டத்தில் கடலை மிட்டாய் இடம்பெற வாய்ப்பு


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மாநில அரசின், காலை உணவு திட்டத்தில், கடலை மிட்டாய் வழங்கும் யோசனை நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சேவூர் நிலக்கடலைக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் மானாவாரி பயிராக, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் நிலக்கடலை, பிற இடங்களில் விளையும் நிலக்கடலையை விட சுவையாகவும், எண்ணெய் சத்து அதிகமாகவும் இருப்பதால், கடலை எண்ணெய் தயாரிப்புக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.கோவை, பொள்ளாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் கூட, சேவூர் நிலக்கடலை, வியாபாரிகளால் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ஏலத்தில், கிலோ, 80 முதல், 85 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் அரசின் காலை உணவு திட்டத்தில், கடலை மிட்டாய் வழங்கும் திட்டத்தை சமூகநலத்துறை கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக, கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த யோசனை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், நிலக்கடலைக்கான தேவை அதிகரித்து, அதன் வாயிலாக கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us