UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 10:57 AM
கோவை:
உலக மனநல தினத்தையொட்டி, நீலகிரி கலை அறிவியல் கல்லுாரியின் உளவியல் துறை சார்பில் சர்வதேச மாநாடு நடந்தது.மனநல தினத்தையொட்டி மன ஆரோக்கியம் ஒரு உலகளாவிய மனித உரிமை என்ற கருப்பொருளில் நீலகிரி கல்லுாரியில் மாநாடு நடந்தது. மாநாட்டை கல்லுாரி மேலாண்மை இயக்குனர் ரஷீத் கசாலி துவக்கி வைத்தார். சிங்கப்பூர் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் தெரபிஸ்ட் ரோசெல் ராஜன், ஆலோசகர் நோரைனி அப்துல் வாழ்த்துரை வழங்கினர்.கல்லுாரி முதல்வர் செந்தில் குமார், கல்வியியல் டீன் மோகன் பாபு, ஆராய்ச்சி டீன் முகமது சிராஜுதீன், உளவியல் துறைத்தலைவர் முஹ்சினா லுபைபா உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஐஷானி கோஷ், சதாக்ஷி சர்மா (பெங்களூரு கிறிஸ்ட் கல்லுாரி) மற்றும் பிரேம் குமார் (பாண்டிச்சேரி பல்கலை) ஆகியோர் சிறந்த தாள் விருதை பெற்றனர்.
