UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 11:01 AM
புழல்:
சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகரில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. அங்கு வசிக்கும் 15 வயது மாணவர், நேற்று முன் தினம் இரவு, 9:00 மணி அளவில், புழல், ஜீவா தெருவில் டியூஷன் முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்றார்.அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே, கஞ்சா போதையில் சென்ற வாலிபர், மாணவரை வழி மறித்து, பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த வாலிபர், மாணவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த மாணவரை சிகிச்சைக்காக, அவரது பெற்றோர், கொளத்துார், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இது குறித்து விசாரித்த புழல் போலீசார், காவாங்கரை, திருநீலகண்டர் நகர், புழல் ஏரி கால்வாய் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் கார்த்திக், 20 என்பவரை, நேற்று காலை கைது செய்தனர்.
