தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்துாரின் பாக்கு தட்டுக்கு அமெரிக்காவில் மவுசு

புத்துாரின் பாக்கு தட்டுக்கு அமெரிக்காவில் மவுசு

புத்துாரின் பாக்கு தட்டுக்கு அமெரிக்காவில் மவுசு


UPDATED : அக் 29, 2023 12:00 AM

ADDED : அக் 29, 2023 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2023 12:00 AM ADDED : அக் 29, 2023 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இயற்கை நமக்கு, ஏராளமான வளங்களை கொடுத்துள்ளன. சிலர் மட்டுமே இவற்றை பயன்படுத்தி, தங்களின் வாழ்க்கையை வளமாக்குகின்றனர்; சாதனை செய்கின்றனர். புத்துாரில் இது போன்ற சாதனையாளர் வசிக்கிறார். தன் உற்பத்திகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்.தட்சிண கன்னடா புத்துாரின் மாடாவு கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீ கிருஷ்ணா, 30. மெக்கானிக்கல் பட்டதாரியான இவர், மற்றவரிடம் கைகட்டி வேலை செய்யாமல், சொந்த தொழில் செய்து, லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்து, தொழிலதிபராக திகழ்கிறார்.பொதுவாக பாக்கு மரம் இலைகளில், தட்டு, கிண்ணங்கள் தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணா, பாக்கு மரம் இலைகளில் 60க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் தட்டு, ஐஸ்கிரீம் கப், சோப்பு பெட்டிகள், ஸ்பூன் என, பல விதமான பொருட்களை, மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளார். இவற்றுக்கு நல்ல மவுசு உள்ளது.மெக்கானிகல் பொறியாளரான இவர், பாக்கு மரம் இலைகளை பயன்படுத்தி வெவ்வேறு பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்களை, தானே வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. புத்துாரின் மாடாவி கிராமத்தில் தயாராகும் தட்டுகள், ட்ரேக்கள், கிண்ணங்கள் உட்பட, மற்ற பொருட்கள் பொருட்கள் தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, குஜராத் உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஸ்ரீகிருஷ்ணாவின் தொழிற்சாலையில், கிராமத்தின் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அரசு அல்லது தனியார் நிறுவனத்தில், வேலை கிடைக்கும் என, காத்திருக்காமல், கிராமத்தில் எளிதாக கிடைக்கும் பாக்கு இலைகளை வைத்து, தொழிலதிபராக வளர்ந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா, மற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். தன் தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்கள், கிராமத்தினரின் பாக்கு மரங்களின் இலைகளை, தன் தொழிலுக்கு பயன்படுத்துகிறார்.- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us