பள்ளிக்கு குழந்தைகள் ஏன் வரலை பெற்றோரிடம் விசாரித்த கமிஷனர்
பள்ளிக்கு குழந்தைகள் ஏன் வரலை பெற்றோரிடம் விசாரித்த கமிஷனர்
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 09:51 AM
கோவை:
செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில், தினசரி பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, கமிஷனர் காரணத்தை கேட்டறிந்தார்.வாலாங்குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதற்காக, ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருச்சி ரோடு வழியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இங்கு, நேற்று ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, 76வது வார்டு தெலுங்குபாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பதிவேடுகளை ஆய்வு செய்தார். சுகாதார நிலைய வளாகத்தில், கூடுதல் கட்டடம் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.செல்வபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர் வாயிலாக வகுப்புகள் நடத்தி கல்வி தரத்தை மேம்படுத்த, பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தினசரி பள்ளிக்கு வருகை தராத மாணவர்களின் பெற்றோரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு காரணம் கேட்டறிந்தார். மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த், கல்விக்குழு தலைவர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
