தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களுக்காக புது இணையதளம் மை பாரத்!

இளைஞர்களுக்காக புது இணையதளம் மை பாரத்!

இளைஞர்களுக்காக புது இணையதளம் மை பாரத்!


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தேசத்தை கட்டியெழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், நாடு தழுவிய அளவில், மேரா யுவ பாரத் எனப்படும் இயக்கம், சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளான நாளை துவங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.பிரதமராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.அதன்படி நேற்று, 106வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
காந்தி ஜெயந்தியை ஒட்டி, புதுடில்லியில் காதி தயாரிப்புகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.பண பரிவர்த்தனை
கனாட் பிளேசில் உள்ள காதி அங்காடியில், ஒரே நாளில் மட்டும், 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன், நாட்டில் காதி பொருட்களின் விற்பனை, 30,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஒவ்வொரு முறையும் போல, இந்த முறையும், பண்டிகைகளின் போது, உள்ளூர் மக்களின்தயாரிப்புகளை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சுற்றுலா அல்லது யாத்திரை செல்லும் போது, அந்த பகுதியில் உள்ள உள்ளூர் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பொது மக்கள் வாங்க வேண்டும். நம் வீட்டில் ஒளியேற்றும் பொருட்களில், நம் நாட்டு மக்களின் வியர்வையின் மணம் இருக்க வேண்டும்; நம் இளைஞர்களின் திறன் இருக்க வேண்டும்.அன்றாட வாழ்க்கையின் எந்தவொரு தேவையாக இருந்தாலும் சரி, நாம் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவது, கைவினை கலைஞர்களுக்கு வரவிருக்கும் தீபாவளி பண்டிகையில் பிரகாசத்தை ஏற்படுத்தும். இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. பல பெரிய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை இங்கு உற்பத்தி செய்கின்றன. இது, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்துகிறது. பொருட்களை வாங்கும் போது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையை பயன்படுத்த வேண்டும்.பெருமை
நாளை, இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, மேரா யுவ பாரத் என்ற இயக்கம் துவங்கப்பட உள்ளது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள MYBharat.Gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, இளைஞர்கள் பதிவு செய்ய வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை, நம் இளைஞர்களுக்கு, மை பாரத் இணையதளம் வழங்கும்.இது, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் முயற்சியில், இளைஞர்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் தனித்துவமான முயற்சியின் ஒரு பகுதி. மேலும், நாளை முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாளும் வருகிறது. அவருக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்.வரும் நவ., 15ல், ஒட்டுமொத்த தேசமும் பழங்குடிகள் பெருமை தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த தினம், மகான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுடன் தொடர்புடையது. அவர், அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறார். உண்மையான துணிச்சல் மற்றும் தான் கொண்ட உறுதியில் ஒருவர் எவ்வாறு உறுதியாக நிற்பது என்பதையும், பிர்சா முண்டாவின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.தமிழ் எழுத்தாளர்களுக்கு பாராட்டு
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் வாயிலாக, நிட் இந்தியா, த்ரூ லிட்ரேச்சர் என்ற இயக்கத்தை உருவாக்கி உள்ளார். இலக்கியம் வாயிலாக தேசத்தை ஓரிழையில் கோர்ப்பது என்பது இதன் பொருள். இதற்காக அவர், கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர், 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார். பல்வேறு இடங்களுக்குச் சென்று, பயணத் தகவல்களை சிவசங்கரி வெளியிட்டார். இது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்தில், நான்கு பெரிய தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இதே போல, கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தின், கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில், 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். மேலும், 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதி உள்ளார். சிவசங்கரி, ஏ.கே.பெருமாள் ஆகியோரின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us