தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர்கள் நலனுக்காக போராடுவோம்: அ.தி.மு.க., அன்பழகன்

மருத்துவ மாணவர்கள் நலனுக்காக போராடுவோம்: அ.தி.மு.க., அன்பழகன்

மருத்துவ மாணவர்கள் நலனுக்காக போராடுவோம்: அ.தி.மு.க., அன்பழகன்


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கள் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ராஜா, மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
சென்டாக் நிர்வாகம் குளறுபடியால் 441 மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 30 தேதிக்குள் முடிக்க தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது. ஆனால் சென்டாக் நிர்வாகம் இறுதி தேதிக்கு பிறகு 450 மாணவர்களை சேர்த்துள்ளது.ஏற்கனவே இதுபோன்ற பிரச்னையால் மாணவர்கள் நீதிமன்றத்தின் மூலம் கல்வி பயின்றனர். தற்போது சேர்த்துள்ள மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட் வரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் நேரிடையாக டெல்லிக்கு சென்று இப்பிரச்னையை தீர்க்க வேண்டும். அரசு தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டால் மருத்துவ மாணவர்கள் நலனுக்காக அரசை எதிர்த்து அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தனித்து நின்று வெற்று பெறும். இவ்வாறு அவர், பேசினார்.கூட்டத்தில், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., பாஸ்கர், ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற 500 நிர்வாகிகளுக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வாட்ச் வழங்கினார். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us