தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுத் தேர்வுகளில் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கும்: உயர்நீதிமன்றம் கருத்து

அரசுத் தேர்வுகளில் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கும்: உயர்நீதிமன்றம் கருத்து

அரசுத் தேர்வுகளில் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கும்: உயர்நீதிமன்றம் கருத்து


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் சமுதாயத்தை பெரிய அளவில் பாதிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு நடந்தது. இதற்கான விடைத்தாள்கள் ஏப்ரலில் திருத்தப்பட்டது. மதுரை விடைத்தாள்கள் திருத்தப்பட்ட முகாமில் இரண்டு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் 3 பாடங்களில் சென்டம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.ஒரே கையெழுத்து சர்ச்சை குறித்து தேர்வுத்துறை விசாரணை நடத்தியதில் அவர்கள் மதுரையை சேர்ந்த ஒரே பள்ளி மாணவர்கள் என தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் விடைத்தாள்கள் கலக்கும் (ஷப்பிளிங்) முறைகேடு நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் சிக்கியதால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி முடிவை கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது.இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் சமுதாயத்தை பெரிய அளவில் பாதிக்கும். எனவே தேர்வு முறைகேட்டை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.சிபிசிஐடி.,க்கு மாற்றம்
இந்த வழக்கை சிபிசிடிஐ போலீஸ் கூடுதல் இயக்குநர் விசாரணை நடத்தி 6 மாதங்களில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us