UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 09:34 AM
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை நுாலகத்திற்கு கட்டடம் கட்ட கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துக்கான நுாலகம், பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்தது. பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தும்போது அங்கிருந்த பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பின், நுாலகத்திற்கான இடமும் கிடைக்கவில்லை. கட்டடமும் இல்லை.தற்போது, தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதுவும், 2 ஆண்டுகளுக்கு ஒரு இடம் என மாற்றி மாற்றி வாடகை கட்டடத்தில் இயக்கி வருகின்றனர். வாடகை கட்டடம் என்பதால், நாமகிரிப்பேட்டை நுாலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்கள் எதுவும் வரவில்லை. நுாலகத்திற்கு புத்தகம் வாங்குவதற்காக டவுன் பஞ்., ஒதுக்கும் பணம், பல லட்சம் ரூபாய் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இந்நிலையில், நாமகிரிப்பேட்டையில் நுாலகம் கட்டித்தரக்கோரி, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் சார்பில், நேற்று கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. மாநில தலைவர் சிவலிங்கம் மாநில செயலாளர், குமார் மாநில இணை செயலாளர் ரவி உள்ளிட்டோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். நாமகிரிப்பேட்டை கடைகள், வீடுகள், மாணவர்கள், கல்வியாளர்களை சந்தித்து கையெழுத்து பெற்று வருகின்றனர். இதை முதல்வர், கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
