UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 10:01 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
விருதுநகரில் விதைப்பந்து துாவுதல் திட்டம் துவங்கப்பட்டது.அரசு ஐ.டி.ஐ.,ல் மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில், விதைப்பந்து தூவுதல் திட்டத்தை ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.இந்த திட்டத்திற்காக 3 லட்சம் விதைப்பந்துகள் பெறப்பட்டு, வனப்பகுதிகள், கண்மாய் கரையோரங்கள், புறம்போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மூலம் துாவ திட்டமிடப்பட்டுள்ளது.
