தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஸ் டே கொண்டாடிய பள்ளி மாணவர்களின் சாகச பயணம்

பஸ் டே கொண்டாடிய பள்ளி மாணவர்களின் சாகச பயணம்

பஸ் டே கொண்டாடிய பள்ளி மாணவர்களின் சாகச பயணம்


UPDATED : அக் 31, 2023 12:00 AM

ADDED : அக் 31, 2023 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2023 12:00 AM ADDED : அக் 31, 2023 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்புறத்தில் தொங்கியும், ஜன்னல் கம்பிகள் பிடித்துக் கொண்டு சாகச பயணம் செய்தால் பேருந்தில் பயணம் செய்த சக பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து திருத்தணி-சிவாடா வரை அரசு பேருந்து டி7 என்ற பேருந்து தினமும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வேலஞ்சேரி, தாழவேடு, நெமிலி, என்.என்.கண்டிகை வழியாக சிவாடா சென்றடைகிறது. இந்த பேருந்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.காலையில் பள்ளிக்கு வரும்போதும், மாணவர்கள், பேருந்து படிகளில் தொங்கியும், ஜன்னல்கள் மேல் நின்று பயணம் செய்வது வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 70க்கும் மேற்பட்டோர், சிவாடாவில் இருந்து திருத்தணிக்கு வரும் டி7 என்ற பேருந்துக்கு ஆயுத பூஜை என பேருந்தின் முன்பகுதியில் வாழைமரக்கன்றுகள் கட்டி, பேருந்து முழுதும் கலர் பேப்பரால் அலங்காரம் செய்தனர்.தொடர்ந்து பேருந்தில் ஏறி மாணவர்கள் பேருந்தை தட்டி பாட்டு பாடியும் வந்தனர். மேலும் சிலமாணவர்கள் பேருந்தின் பின்புறத்தில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு தரையில் கால்களை உரசியபடி சாகசப் பயணம் செய்தனர்.மாணவர்களின் செயலை பார்த்ததும், பேருந்தில் பயணம் செய்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் திருத்தணி அரசு கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும் அரசு பேருந்துகளில் ஆபத்தான பயணம் செய்வதும், சாகசப் பயணம் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us