UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 10:09 AM
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சியில் உள்ள இ.என்.கே. சத்தியநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் தலையாறிதாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியையும், ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் பாலாஜி ஆக்கிரமித்துள்ளர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பா.ஜ., திருத்தணி ஒன்றிய தலைவர் வீரபிரம்மா ஆச்சாரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், அ.தி.மு.க., கவுன்சிலர் பாலாஜி அரசு பள்ளி வளாகத்தில் சவுக்கு மரங்கள், தென்னங்கீற்று ஆகியவை போட்டு வியாபாரம் செய்து வருகிறார்.பள்ளியைச் சுற்றியும் சவுக்கு கட்டைகள் போட்டுள்ளதால் விஷ ஜந்துக்கள் பள்ளி வகுப்பறையில் புகும் அபாயம் உள்ளது. மேலும், நீர்ப்பிடிப்பு பகுதியிலும் ஆக்கிரமித்து சவுக்கு கட்டைகள் மற்றும் தென்னங்கீற்றுகள் இருப்பு வைத்துள்ளார்.பலமுறை கிராம மக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கவுன்சிலரிடம் கட்டைகள், கீற்றுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மெத்தனமாக செயல்படுகிறார். எனவே வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
