UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 07:46 PM
சென்னை:
ஆதரவற்ற மாணவியர் 15 பேர், கோவை - சென்னை விமானத்தில், உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.கோவையில் உள்ள சேவா நிலையம் என்ற அமைப்பு, ஆதரவற்ற மாணவியர், 15 பேரை, கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியது.இதுகுறித்து, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் மைய இயக்குனர் சபரி நாயர் கூறியதாவது:
இந்த மாணவியருக்கு மறக்க முடியாத நினைவுகளை வழங்க நாங்கள் முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் தோன்றியது தான், இந்த விமான பயணம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.அத்துடன் பல்வேறு இடங்களை அவர்களுக்கு சுற்றிக் காண்பித்ததோடு, திரைப்படம், உணவு ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கியது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
