UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 07:51 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பள்ளிக்கல்வித் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில், 46 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித் துறையில், காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிகளில் காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற, 29 பேருக்கு தட்டச்சராகவும், 17 பேருக்கு சுருக்கெழுத்து தட்டச்சராகவும், பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று கவுன்சிலிங் வழியாக, பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான குறைதீர் மையம், இன்று துவங்கப்பட்டது.
