தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தபால் சேவைக்கு வயது 175!

தபால் சேவைக்கு வயது 175!

தபால் சேவைக்கு வயது 175!


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
இந்திய அஞ்சல்துறையின், பதிவு அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, 174 ஆண்டுகள் கடந்த பின்பும் தொடர்ந்து, சிறப்பான சேவை வழங்கி வருகிறது.அஞ்சலை பாதுகாப்பாக அனுப்ப சிறந்த தேர்வாக இருக்கும், பதிவு அஞ்சல் சேவை,1849ம் ஆண்டு துவங்கப்பட்டது. 174 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றும் கோர்ட், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த கடிதங்கள் பதிவு அஞ்சல்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகிறது.சாதாரண அஞ்சல் சேவை மட்டுமே இருந்த போது, முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக அனுப்புவதில் சிக்கல் இருந்தது. இதை கருத்தில் கொண்டு, 1849ம் ஆண்டு, நவ.,1ம் தேதி, பதிவு அஞ்சல் சேவையை, இந்திய தபால்துறை அறிமுகப்படுத்தியது.பதிவு அஞ்சல்கள் என்பவை பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் பதிவுச்சான்று ஆகிய கூடுதல் வசதிகளுடன் கூடிய, சாதாரண அஞ்சல்களாகும். முக்கிய ஆவணங்கள், சான்றுகளை அனுப்பும்போது எந்த கவலையுமின்றி, பதிவு அஞ்சல்களில் அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் பதிவு அஞ்சல்கள், எங்கு இருப்பது என்பதை டிராக்கிங் எண் மூலம் கண்காணிக்கலாம்.முகவரியில் உள்ளவர், முகவரிதாரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்ற அஞ்சல்களை பெறுவது போலில்லாமல், கடிதத்தின் முகவரிதாரர், முகவரிக்குரியவர் மட்டுமே, பதிவு அஞ்சலை பெற முடியும்.சாதாரண தபால் கட்டணத்தை விட, பதிவு தபால் கட்டணம் 17 ரூபாய் கூடுதலாகும். மேலும், 3 ரூபாய் கூடுதலாக செலுத்தினால், அஞ்சல் டெலிவரி செய்யப்பட்டவுடன் ஒப்புதல் அட்டை அனுப்புனர் முகவரிக்கே வழங்கப்படும். இதில், கடிதம் கிடைத்த தேதி, பெறுனரின் கையொப்பம் ஆகியவை இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us