தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாக்பீஸ்சில் பழங்குடியின மாணவர்கள் கலைவண்ணம்

சாக்பீஸ்சில் பழங்குடியின மாணவர்கள் கலைவண்ணம்

சாக்பீஸ்சில் பழங்குடியின மாணவர்கள் கலைவண்ணம்


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
சாக்பீஸ்சில் வண்ண மயமான பொருட்களை தயாரித்து, பழங்குடியின மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.வால்பாறை நகரில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இந்தப்பள்ளியில் பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 158 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தப்பள்ளியில், மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசும் வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரவின் (7ம் வகுப்பு), சந்தோஷ் (8ம் வகுப்பு) ஆகிய இரண்டு மாணவர்களும், கரும்பலகையில் எழுதும் சாக்பீஸ்சை பயன்படுத்தி, புல்லாங்குழல், கிரிக்கெட் பேட், பந்து, சுத்தியல், அரிவாள், டஸ்டர், ஏணி, கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தங்களது கைவண்ணத்தில் உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளனர்.கோவை நேசம் டிரஸ்ட் இயக்குனர் செந்தில்குமார், செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
பழங்குடியின மாணவர்கள், கல்வியில் மட்டுமல்லாது பிற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். வால்பாறை வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளிலும், மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.சாதாரண சாக்பீஸ்சை கொண்டு, உருவாக்கப்பட்ட பொருட்கள் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us