தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி கல்விச்சான்று: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி கல்விச்சான்று: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி கல்விச்சான்று: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற சிலர் போலி கல்விச் சான்று பெற்ற விவகாரத்தில் மதுரை காமராஜ் பல்கலை மட்டுமன்றி பிற பல்கலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:
 தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப்1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜனவரி 20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை.கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலை தொலைநிலைக் கல்வியில் கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து சான்று பெற்றவர்கள். பள்ளிக் கல்வி முதல் கல்லுாரி வரை தமிழ்வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2021 மார்சில் நீதிபதிகள் அமர்வு, தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் போலிச் சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும், என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு சக்திராவ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு:
மதுரை காமராஜ் பல்கலையில் 5 பேர் பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்றது குறித்து விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பல்கலை தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை.மதுரை காமராஜ் பல்கலை தரப்பு:
மாணவர்கள் பல்கலையில் சேர்ந்து படித்து, தேர்வு எழுதி, சான்று பெற்றது உண்மை. மாணவர் சேர்க்கைக்கு போதிய ஆவணங்கள் இல்லை. விசாரணைக்கு முக்கிய ஆவணங்களை போலீசாரிடம் வழங்கியுள்ளோம். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். டி.என்.பி.எஸ்.சி.,தரப்பு:
மதுரை காமராஜ் பல்கலை தவிர பிற பல்கலைகளில் படித்து 29 பேர் பி.எஸ்.டி.எம்., சான்று பெற்று வேலையில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்:
மதுரை காமராஜ் பல்கலை மற்றும் இதர பல்கலைகளில் பி.எஸ்.டி.எம்., சான்று பெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும். முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிய லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரி ஒப்புதல் அளிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நவ.,27ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us