தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா போட்டி: நாசா செல்லும் மாணவர்கள்

தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா போட்டி: நாசா செல்லும் மாணவர்கள்

தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா போட்டி: நாசா செல்லும் மாணவர்கள்


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி- வினா போட்டி, கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும். இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல் மெகா வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான போட்டி, பட்டம் இதழ் மற்றும் இந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில், கோவைப்புதுார், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது. பள்ளி அளவிலான முதல் சுற்றில், 800 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, 8 அணிகளாக பிரித்து, இறுதிச்சுற்று போட்டி நடந்தது. மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை ஜி அணியை சேர்ந்த மாணவி சந்தனா, மாணவர் கிஷோர்குமார் ஆகியோர் வென்றனர்.இரண்டாம் பரிசை, இ அணியை சேர்ந்த மாணவி ஸ்ரீஜனனிகா, மாணவர் மெல்வின் ஜோனாதனும், மூன்றாம் பரிசை, பி அணியை சேர்ந்த மாணவி அனுஷா மகாலட்சுமி மற்றும் சுதந்த்ராவும் வென்றனர்.இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன், முதல்வர் சரண்யா ஆகியோர் வழங்கினர். மெகா வினாடி-வினா போட்டிகளை, கோ-லோ நிறுவனம் இணைந்து வழங்கியது.தேர்வு செய்வது எப்படி?
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, முன்பதிவு செய்த, 150 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், போட்டியில் பங்கேற்க உள்ளனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.இதில் இருந்து, எட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரியில் இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் முதல்பரிசு பெறும் இரு மாணவர்களுக்கு, அமெரிக்காவின் நாசாவை சுற்றி பார்க்கும், அரிய வாய்ப்பு கிடைக்கும்.இரண்டாமிடம் பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கு, லேப்டாப்; மூன்றாம் இடத்தை பிடிக்கும் இருவருக்கு, டேப்லெட் மற்றும் நான்காம் பரிசாக தலா 10 மாணவர்களுக்கு, ஸ்மார்ட்வாட்ச் வழங்கப்படும்.வெற்றி பெற்ற டாப் 25 அணிகளை சேர்ந்த, 50 மாணவர்களுக்கு, ஆறுதல் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். போட்டிகள் அனைத்தும், தினமலர் நாளிதழ் பட்டம் இதழ் மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமம் சார்பில் நடத்தப்படுகிறது. கோ-லோ நிறுவனம் கோ-ஸ்பான்சராக உள்ளது.போட்டியில் வெல்வோம் நாசா செல்வோம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us